|
| உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு: அரசு விளக்கம் |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 08:39 IST ) | |
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள வரைவு சாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெறவுள்ள மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் இம்மாதம் 22 முதல் 24-ம் தேதி வரை மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்துள்ளது.
அதில், 'ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், டெல்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்த வரைவு சாசனம் நிறைவேற்றப்பட்டு பிரதமரிடம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து மார்ச் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதிகடிதம் எழுதிய கடிதத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவர்களை கட்டாயப்படுத்தக் கூடாத என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இந்த வரைவு சாசனம் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மாநில அரசுகளை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளை ஏற்க முடியாது என்ற அவர், ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
முதல்வரின் கடிதத்தில் உள்ளபடி ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படாததால், டெல்லி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேற்குவங்க அரசும், மத்திய அரசின் வரைவு சாசனத்தை எதிர்த்து மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி வழங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழக அரசு முன்னணியில் உள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்ட்டு அவற்றின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மாநில அரசு தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்துதான் வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|