|
| கொடைக்கானலில் நக்சலைட் தீவிரவாதி சுட்டுக் கொலை |
| கொடைக்கானல்(ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 18:44 IST ) | |
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று காலை நக்சலைட் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர் ; 2 பேர் காயத்துடன் பிடிப்பட்டனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் தாண்டிக்குடி செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் இன்று காலையில், அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நவீன் என்கிற பிரசாத் (வயது 25) என்பவன் உட்பட சில நக்சலைட் தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் இரண்டு நக்சலைட்டுகள் குண்டு காயத்துடன் பிடிபட்டனர். அதே சமயம் 5 பேர் தப்பி விட்டதாக தெரிகிறது. தப்பி ஓடியவர்களைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்றும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட நவீன் மீது மதிக்கோன்பாளையம் காவல்நிலையத்தில் ஆயுத வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2002 ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட நக்சலைட்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாரிடம் பிடிபடாமல் தப்பி ஓடிய நக்சலைட்டுகளில் நவீனும் ஒருவர்.கடந்த 6 ஆண்டுகளாக போலீசார் இவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானலில் இன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|