|
| 'பதுக்கலை தடுக்க உணவுப் பொருட்கள் இருப்புக்கு வரம்பு' |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 18:35 IST ) | |
பதுக்கலை தடுக்க சமையல் எண்ணெய் , அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இருப்பு வைப்பதில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு உடனடியாக வரம்புகள் நிர்ணயிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
*சமையல் எண்ணெய் மற்றும் அரிசி இருப்பு வைப்பதில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு உடனடியாக வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
* கோதுமை, கோதுமை மாவு மற்றும் பயறு வகைகளுக்கு மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு இருப்பு வைக்க உள்ள வரம்புகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதனால், மொத்த வணிகத்தில் கோதுமை 100 டன்னுக்கும், பயிறு வகைகள் 250 டன்னுக்கும் அதிகமாக இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
* சில்லறை வணிகர்களுக்கு கோதுமை 3.125 டன்னுக்கு அதிகமாகவும், பயறு வகைகள் 6.25 டன்னுக்கு அதிகமாகவும் இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
* துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்ய உணவு வழங்கல் துறை ஆணையர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவினை 24.04.2008 அன்று பர்மா மற்றும் மலேசியா நாடுகளுக்கு அரசு அனுப்பி வைக்கும்.
* பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் கோதுமையை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்கவும், ரவை, மைதா போன்ற பொருட்களை சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கவும் தேவைப்படும் கோதுமையை நுகர்பொருள் வாணிபக் கழகமே பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து நேரடியாக வாங்கி விநியோகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
* உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டாலோ, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டாலோ அவற்றைத் தடுக்க உணவு வழங்கல் துறை மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* மாநில அளவில் தலைமைச் செயலாளரின் தலைமையில் விலைவாசி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் கூடி ஆய்வு செய்து அவ்வப்போது உள்ள விலை நிலவரத்திற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் தேவை மற்றும் கிடைக்கின்ற அளவை அறிந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து பருவ காலங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதுடன் நியாய விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரு மாற்றுத் தீர்வாக கனடா நாட்டிலிருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து பரீட்சார்த்த முறையில் குறைந்த விலையில் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|