|
| சட்டப்படி 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 17:38 IST ) | |
'உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, சட்டப்படிதான் அளிக்கப்பட வேண்டுமே தவிர, சலுகைப்படி அல்ல' என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
27 சதவீத இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரைச் சேர்க்க சட்டரீதியாக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
"கிரீமி லேயர்'' என்ற சொல் எல்லோரையும் இப்படித்தான் குழப்பிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் மகிழ்ச்சியுற்றிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 'கிரீமி லேயர்' என்பது வேண்டாத ஒன்றுதான்.
அது நீக்கப்பட வேண்டும் என்பதுதான் திமுக உயர்மட்டக் குழுவின் தீர்மானமே தவிர, அதைச் சேர்க்க வேண்டும் என்று திமுக சொல்லவில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே உள்ளவர்களுக்கு மட்டும் செய்யும்போது, எஞ்சிய இடங்கள் இருக்குமானால் அப்போது பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையிலே உள்ளவர்களுக்கு அந்த இடங்கள் அளிக்கப்படலாம் என்கிறார்கள்.
அதனால்தான் நாங்கள் நேற்றைய தினம் நிறைவேற்றிய தீர்மானத்தில் 27 சதவீத இட ஒதுக்கீட்டினை முழுமையாகவும் உடனடியாகவும் வரும் கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.
அதுமாத்திரமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிரப்பிடும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைத்திடத் தக்கவகையில், `கிரீமி லேயருக்கான' அளவுகோல்களை ஓரளவுக்கு அரசு தளர்த்திக் கொள்ளலாம்.
நாங்கள் சமூகநீதிக் கொள்கை சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதுகிறவர்கள். சட்டப்படிதான், இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமே தவிர சலுகைப்படி அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|