யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அரசு மருத்துவமனை: குழந்தைகள் மாறியதால் போராட்டம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008   ( 13:28 IST )
ஊழியர்களின் தவறால் சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இடம் மாறியதன் காரணமாக, பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பரக்கத் பேகம் மற்றும் காமாட்சி ஆகிய இரு பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்தன. பரக்கத் பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், காமாட்சிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் முதலில் கூறினர்.

ஆனால், வார்டு சோதனைக்கு வந்த டாக்டர்கள், பரக்கத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், காமாட்சிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் கூறியதால் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகளை இடம் மாற்றம் செய்ய முயன்றனர். ஆனால் பரக்கத் பேகம் மற்றும் காமாட்சி ஆகியோரின் உறவினர்கள் இதை தடுத்து வாக்குவாதத்தில் இறங்கினர்.

பரக்கத் பேகத்துக்குத்தான் ஆண் குழந்தை பிறந்ததாகவும், காமாட்சிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், ஊழியர்களின் சிறிய தவறால் குழந்தைகள் இடம் மாறிவிட்டதாகவும் டாக்டர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். இதை ஏற்க மறுத்து, தங்களிடம் தான் ஆண் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. 'மருத்துவமனை ஊழியர்கள் செய்த தவறுக்காக தங்களது ஆண் குழந்தையை இழக்க முடியாது' எனக் கூறி இரு தரப்பினருமே சாலை மறியலில் குதித்தனர். இதனால் மருத்துவமனைக்கு வெளியேயும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் மற்றும் அவற்றின் பெற்றோருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து, எந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை முடிவு செய்ய டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த முடிவு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை இரு குழந்தைகளையும் டாக்டர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரதமர் மன்மோகன் சிங்- ராமதாஸ் சந்திப்பு
செ‌ன்னை‌யி‌ல் ரவுடிகள் வே‌ட்டை: 1,200 பே‌ர் கைது
கிரீமிலேயரை நீக்க கோர்ட்டை அணுகுவோம்: கருணாநிதி
திமுக ஆட்சியின் சாதனைகளை மூடி மறைக்க சதி: கருணாநிதி
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம்
கிரீமிலேயரை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : டி.ஆர்.பாலு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...