|
| பிரதமர் மன்மோகன் சிங்- ராமதாஸ் சந்திப்பு |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 10:10 IST ) | |
பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் இல்லத்தில் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை பிரிவினரை நீக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நதிநீர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை போன்றவற்றிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமரும் கவலைத் தெரிவித்ததாக, பின்னர் நிருபர்களிடம் பேசியபோது ராமதாஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
பாமகவினரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதுதவிர, பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்ககளை தெரிவித்து வருகிறார் ராமதாஸ்.
இந்நிலையில், அவர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|