யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
செ‌ன்னை‌யி‌ல் ரவுடிகள் வே‌ட்டை: 1,200 பே‌ர் கைது
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008   ( 09:54 IST )
செ‌ன்னை‌யில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ரவுடிக‌ள் உ‌ள்பட ஆயிரத்து 200 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

செ‌ன்னை மாநகரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் சென்னை அயனாவர‌த்‌தில்‌ நடந்த போலீஸ் எண்கவுண்டரில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடிக‌ள் ஜெயக்குமா‌ர் மற்றும் சுடலைம‌ணி ஆ‌கிய 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதைதொடர்ந்து, செ‌ன்னை மற்றும் அத‌ன் சு‌ற்று‌ப்புற‌ப் பகு‌திக‌ளில் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக ‌விரோ‌திக‌ளை போலீசார் வேட்டையாட தொடங்கியுள்ளனர்.

அதன்படி, சென்னை மாநகர‌ போலீஸ் கமிஷனர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் தலைமை‌யி‌ல் இணை கமிஷனர்கள் ர‌வி, பாலசு‌ப்‌பிரம‌‌ணிய‌ம், துரை ரா‌‌‌ஜ் ஆ‌கியோ‌ர் மே‌ற்பா‌ர்வை‌யி‌ல் சுமார் 5 ஆயிரம் போலீசார் ந‌ள்‌ளிரவு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 440 குழு‌க்களாக‌ப் ‌பி‌ரி‌ந்து செ‌ன்னை ம‌ற்று‌ம் அத‌ன் சு‌ற்று‌ப்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் சோதனை நட‌‌த்தினர். இதில், ‌விடு‌திக‌ள், உணவக‌ங்க‌ள் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வாகனச் சோதனையும் தீவிரமாக்கப்பட்டது.

இந்த அதிரடி வேட்டையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பய‌ங்கர ரவுடிக‌ள் 50 பே‌ர், பழைய கு‌ற்றவா‌ளிக‌ள் 150 பே‌ர், தலைமறைவு‌க் கு‌ற்றவா‌ளிக‌ள் 50 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதுத‌விர, ஹெ‌ல்மெ‌ட் அ‌ணியாம‌ல் வாகன‌ம் ஓ‌ட்டிய 800 பேரு‌ம், குடிபோதை‌யி‌ல் வாகன‌ம் ஓ‌‌ட்டிய 100 பேரு‌ம், பொது அமை‌‌தி‌க்கு ஊறு ‌விளை‌வி‌த்த 50 பேர் என ஆயிரத்து 200 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக‌ போலீசார் தெரிவித்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிரீமிலேயரை நீக்க கோர்ட்டை அணுகுவோம்: கருணாநிதி
திமுக ஆட்சியின் சாதனைகளை மூடி மறைக்க சதி: கருணாநிதி
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம்
கிரீமிலேயரை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : டி.ஆர்.பாலு
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உடல் அடக்கம்: ஜெ. இரங்கல்
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...