|
| கிரீமிலேயரை நீக்க கோர்ட்டை அணுகுவோம்: கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 09:29 IST ) | |
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்தும்போது வசதிபடைத்தோரும் (கிரீமிலேயர்) பயன்பெற வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
இதுதொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பபட்டோருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தது.
ஆனால், இட ஒதுக்கீட்டு வரைமுறையிலிருந்து கிரிமிலேயரை நீக்கக்க்கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
எனினும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே, உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோரில் வசதி படைத்தோரை நீக்கி, 27 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், திமுக உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
கிரீமி லேயர் என்ற பாகுபாட்டை ஏற்காமல் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே நடைமுறைப் படுத்தினால் அதனை திமுக மகிழ்ச்சியுடன் வரவேற்கும்.
ஆயினும், சால்வையை (கிரீமி லேயர்) தராமலேயே சட்டையை (இட ஒதுக்கீடு) மட்டுமே தந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அடுத்த ஆண்டு சால்வையையும் கேட்போம்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தோர் என்ற கொள்கையை திமுக ஏற்றுக்கொள்ளாது. அதனை நீக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|