யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திமுக ஆட்சியின் சாதனைகளை மூடி மறைக்க சதி: கருணாநிதி
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 18:06 IST )
திமுக ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒருசாரர் மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே திட்டமிட்டு சில விஷமச் செய்திகளை பரப்பி அந்த நெருப்பில் குளிர்காய முனைகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி சாடியுள்ளார்.

தொலைபே‌சி ஒ‌ட்டு‌க் கே‌ட்பு ‌விவகார‌த்‌தி‌ல் ‌விசாரணை நட‌த்த ஓ‌ய்வுபெ‌ற்ற ‌நீ‌திப‌தியை ‌நிய‌மி‌த்தாலு‌ம் ‌சில‌ர் குறைகூ‌றி வரு‌கி‌ன்றன‌‌ர் எ‌ன்று அவர் கருணா‌நி‌தி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள கே‌ள்‌வி - ப‌தி‌ல் அ‌றி‌க்கை வருமாறு:

கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள்.

ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதற்காக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்களே?இதற்கு காரணம் என்ன?

பதில்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு "முப்பரி நூல்'' கிடையாதே. இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே, காலில் பிறந்த சாதியில் பிறந்தவராயிற்றே, அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒருசாரர் மூடி மறைத்து விட்டு வேண்டும் என்றே திட்டமிட்டு சில விஷமச் செய்திகளை பரப்பி அந்த நெருப்பில் குளிர்காய முனைகிறார்கள்.

என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர் ‌நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தாலும், `விகடன்' கேலி செய்கிறார். சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை காஞ்சன மாலையின் பேச்சையே டேப் செய்து போட்டு காட்டி மிரட்டி‌ப் பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?

இவ்வாறு கருணா‌நி‌தி தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம்
கிரீமிலேயரை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : டி.ஆர்.பாலு
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உடல் அடக்கம்: ஜெ. இரங்கல்
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி
'பிரபாகரன்' சினிமாவுக்கு ஜூன் 9 வரை தடை
எறையூரில் மர்ம தீ: 10 வீடுகள் சாம்பல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...