யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நடிகை தே‌னி கு‌ஞ்சரம்மா‌ள் உடல் அடக்கம்: ஜெ. இரங்கல்
சென்னை (ஏஜென்சி ), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 14:14 IST )
மரணமடைந்த நடிகை தேனி குஞ்சரம்மாளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகி குஞ்சரம்மாள் (வயது 80). இவரை இயக்குனர் பாரதிராஜா திரையுலகில் அறிமுகம் செய்தார். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உட்பட 60க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ள இவர் திரைப்படங்களிலும் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று மரணமடைந்தார்.

இவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை கே.கே.நகரில் உள்ள சுடுகாட்டில் நடைபெ‌ற்றது.

தேனி குஞ்சரம்மாள் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திரைப்பட நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மாள் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

நடிகை குஞ்சரம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மரக்காணம் அருகே லா‌ரி- டிரா‌க்ட‌ர் மோத‌ல்: 3 பேர் பலி
'பிரபாகரன்' சினிமாவுக்கு ஜூன் 9 வரை தடை
எறையூரில் மர்ம தீ: 10 வீடுகள் சாம்பல்
சென்னையில் பிரமாண்ட தாவரவியல் பூங்கா: கருணாநிதி
மதிமுக அங்கீகார விவகாரம்: 21ம் தேதி விசாரணை
தேசிய வேலைவாய்ப்பு: தமிழகத்துக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...