|
| மரக்காணம் அருகே லாரி- டிராக்டர் மோதல்: 3 பேர் பலி |
| மரக்காணம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 13:59 IST ) | |
மரக்காணம் அருகே டிராக்டரும், டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒரு டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டி புதுச்சேரி சென்றுகொண்டிருந்தனர். அங்குள்ள தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை விற்பதற்காக சென்றனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் மரக்காணம் அடுத்த ஆட்சிக்காடு என்ற இடத்தில் டிராக்டர் வந்தபோது, சென்னையில் இருந்து புதுவை நோக்கி வேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று டிராக்டரின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த நாராயணன், காத்தவராயன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலத்த காயமடைந்த 2 பேர் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை தேவகி என்ற பெண் உயிரிழந்தார்.
இந்த விபத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரை கைது செய்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|