|
| 'பிரபாகரன்' சினிமாவுக்கு ஜூன் 9 வரை தடை |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 13:47 IST ) | |
சர்ச்சைக்குரிய 'பிரபாகரன்' திரைப்படத்தின் மீதான தடை ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சேர்ந்த இயக்குனரின் 'பிரபாகரன்' திரைப்படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி அவதூறாக சித்தரிப்பதாக புகார் எழுந்தது.
இந்த படத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜெமினி கலர் லேப்பிலேயே முடக்கி வைத்து, அழித்துவிடும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. நேற்றைய விசாரணையின்போது, வழக்கில் பிரதிவாதிகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அதோடு, ஜெமினி கலர் லேப் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, இந்த படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வரும் ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|