|
| எறையூரில் மர்ம தீ: 10 வீடுகள் சாம்பல் |
| விழுப்புரம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 13:02 IST ) | |
விழுப்புரம் அருகேயுள்ள எறையூர் கிராமத்தில் 10 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், எறையூர் கிராமத்தில் கிறிஸ்தவ தேலாயத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.
இதன் எதிரொலியாக, கடந்த மாதம் 9ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் ஒரு பிரிவினரின் வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 10 வீடுகள் சாம்பலாயின. இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து அங்கு சுமார் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு பிரிவினரும் மற்றவர்களது பகுதிக்கு செல்ல முடியாதவாறு மையப் பகுதியில் போலீஸ் பூத்கள் அமைக்கபட்டுள்ளன.
இந்த சம்பவம் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|