|
| மதிமுக அங்கீகார விவகாரம்: 21ம் தேதி விசாரணை |
| சென்னை/புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 10:06 IST ) | |
மதிமுக அங்கீகாரம் குறித்த இறுதிக்கட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது.
மதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டி மதிமுகவாக தனிப்பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
தங்களது தலைமையிலான மதிமுக தான் உண்மையானது என்று இவர்களும், வைகோ தலைமையிலான பிரிவினரும் தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து உள்ளனர்.
இதற்காக இரு தரப்பினரும் உரிய ஆதாரங்களை தலைமைத் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது, வைகோ தலைமையிலான மதிமுகவினர் தேர்தல் கமிஷனில் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.
அப்போது செஞ்சி ராமச்சந்திரன் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், இறுதிக்கட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால், யார் உண்மையான மதிமுக என்பது வரும் 21ம் தேதிக்கு பின்னர் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|