|
| தேசிய வேலைவாய்ப்பு: தமிழகத்துக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 09:34 IST ) | |
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.190 கோடி ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தற்போது முதல்கட்ட நிதியுதவி அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2008-09ம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் 10 மாவட்டங்களுக்கு முதல் கட்ட தவணையாக ரூ.190 கோடியே 20 லட்சத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, நாகப்பட்டினம் ரூ.22 கோடி, சிவகங்கை ரூ.25 கோடி, கடலூர் ரூ. 30 கோடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரூ.53 கோடி, கரூர் ரூ.1.61 கோடி, தஞ்சாவூர் ரூ.9.28 கோடி, திருவாரூர் ரூ.2.61 கோடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ.6.14 கோடி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் 3ம் பகுதியாக 20 மாவட்டங்களுக்கு ரூ.56 கோடியே 27 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சீபுரம் ரூ.3.79 கோடி, திருவள்ளூர் ரூ.3.30 கோடி, வேலூர் ரூ.4.91 கோடி, சேலம் ரூ.2.44 கோடி, நாமக்கல் ரூ.2 கோடி, தர்மபுரி ரூ.1.87 கோடி, கிருஷ்ணகிரி ரூ.2.17 கோடி, ஈரோடு ரூ.3.31 கோடி, கோயம்புத்தூர் ரூ.3.60 கோடி, நீலகிரி ரூ.5 கோடி மற்றும் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.2.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ரூ.2.17 கோடி, புதுக்கோட்டை ரூ.2.92 கோடி, மதுரை ரூ.2 கோடி, தேனி ரூ.1.38 கோடி, ராமநாதபுரம் ரூ.1.80 கோடி, விருதுநகர் ரூ.2.82 கோடி, தூத்துக்குடி ரூ.2.70 கோடி, கன்னியாகுமரி ரூ.2.64 கோடி மற்றும் அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.2.80 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|