|
| திருச்சியில் அரசு பஸ்-கார் மோதல்: 4 பேர் பலி |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008 ( 15:45 IST ) | |
திருச்சி அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
கேரளாவை சேர்ந்த 8 பேர், டாடா சுமோ காரில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை 6 மணியளவில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை செந்தண்ணீர்புரம் அருகே கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது எதிரே ஒரு அரசு பஸ்சும், காரும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மோதிய வேகத்தில் கார் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டது. இதில் உடல் நசுங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் காருக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனினும், கிரேன் வரவழைக்கப்பட்ட பின்னரே காரை வெளியே எடுக்க முடிந்தது. பின்னர் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|