யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஆப்கனில் பலியான என்ஜினியர் உடல் தமிழகம் வருகிறது
கிருஷ்ணகிரி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008   ( 14:02 IST )
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியான தமிழக இன்ஜினியர் உடல், வரும் 15ம் தேதி சொந்தஊருக்குக் கொண்டுவரப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இந்திய ராணுவம் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதல்களில் இந்திய ராணுவ என்ஜினியர்கள் 2 பேர் பலியாகினர்.

இதில் கிருஷ்ண கிரி மாவட்டம் திப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியும் பலியானார். புனரமைப்புப் பணிகளை இவர் பார்வையிட வந்தபோது தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி பலியானார்.

இதுகுறித்து திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கோவிந்தசாமி உடல் வரும் 15ம் தேதி விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த 1983ம் ஆண்டு முதல் கோவிந்தசாமி ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இன்னும் இரு ஆண்டுகளில் ஓய்வு பெறப் போவதாக கூறியிருந்தார். அதற்குள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகிவிட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்று சித்திரை திருநாள்: கோயில்களில் வழிபாடு
சென்னை: டிரைவ் - இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டது
தமிழகத்தில் மின்வளம் மேம்படுத்தப்படும்: வீராசாமி
விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் நியமன‌ம்
இடஒதுக்கீ‌‌‌டு: உடனே செயல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...