|
| இன்று சித்திரை திருநாள்: கோயில்களில் வழிபாடு |
| சென்னை (ஏஜென்சி), 13 ஏப்ரல் 2008 ( 12:47 IST ) | |
சித்திரை திருநாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்றி அரசு அறிவித்துவிட்டது.
எனினும், சித்திரை மாதம் பல்வேறு விஷேச நாட்களை கொண்டது. சித்திரை முதல் நாளான இன்று சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் பெரும்பாலான மக்கள் இன்று அதிகாலையிலேயே கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியதை காணமுடிந்தது.
இன்று முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மொபைல்போன் மூலம் சித்திரை திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சித்திரை திருநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|