யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இடஒதுக்கீ‌‌‌டு: உடனே செயல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 17:47 IST )
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 ‌சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் வழங்கிய தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை நீட்டித்து மத்திய அரசு 2006ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற தீர்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு, கல்வியில் 1993 முதல் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வந்துள்ள அதே நடைமுறை உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர வேண்டும் என்ற உத்தரவும், 2006ஆம் ஆண்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகந்ததாக அமைந்துள்ளது.

மத்திய அரசு வரும் கல்வியாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் என வகைப்படுத்தப்படும் `கிரீமி லேயர்' முறை பின்பற்றப்படும்போது, அதற்கு கீழ்நிலையில் உள்ள பிரிவினரில் தகுதியானவர்கள் இல்லை எனில், அந்த இடங்கள் பொதுத் தொகுதிக்கு மாற்றப்படுவதை தவிர்த்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்று சேருவதை உத்தரவாதப்படுத்துமாறு மத்திய அரசை கோருகிறது.

நாட்டின் தலைமை நீதிமன்றம் அளித்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை நீட்டித்து, சமூக நீதியும், நல்லிணக்கமும் பேணப்பட ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது
கிரீமி லேயர் : பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்
தமிழர் நலனைக் காப்பதில் விழிப்புணர்வு வேண்டும் : சரத்குமார்
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து
தமிழரின் சிறப்பைக் காட்டும் சித்திரைத் திருநாள் : வைகோ
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...