|
| தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது |
| ஈரோடு (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008 ( 17:34 IST ) | |
ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் உடனடியாக கண்டுப்பிடிக்கப்பட்டதால் ஈரோடு-கோவை பயணிகள் ரயில் விபத்திலிருந்து தப்பியது.
ஈரோடு மாவட்டம், ஈங்கூர் ரயில் நிலையம் மற்றும் விஜயமங்கலம் இடையே ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஈங்கூர் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஈரோடு-கோவை பயணிகள் ரயில் அந்த வழியே வந்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்தபின்னர், ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|