யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கிரீமி லேயர் : பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்
புதுடெல்லி/ சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 16:14 IST )
27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனை பிற்படுத்தப்பட்டவர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் ருமான வரம்பை உடனடியாக சீரமைக்க மறு ஆய்வு செய்வது அவசியம் என்று பிரதமர் ன்மோகன் சிங்கை திமுக வலியுறுத்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' எனப்படும் வசதிபடைத்தோருக்கு அச்சலுகை அளிக்கப்படக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது 'கிரீமி லேயர்' பிரச்சனையில் திமுகவின் நிலையை தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும் பிரதமரிடம் பாலு அளித்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

27 சதவீத இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கிடைத்துள்ள வெற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனையாகும் என்றாலும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வசதியானவர்களை (கிரீமி லேயர்) அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி பரவலாக அனைத்து பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு வருமானம் உயரும் சூழ்நிலை உள்ளது. எனவே குரூப் `டி' ஊழியர்களின் வாரிசுகளுக்கு கூட 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி இருப்பதாக பொதுவான கருத்து உள்ளது.

எனவே 27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனை 100 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்கள் பெற வேண்டுமானால் வருமான வரம்பை உடனடியாக சீரமைக்க மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.

இது தொடர்பாக திமுகவின் கருத்தை முதல்வர் கருணாநிதி விரைவில் தர உள்ளார். அதன் அடிப்படையில் விரிவான விவாதம் நடத்தி சரியான நேரத்தில் முடிவெடுக்கலாம்.

இந்த பிரச்சினையில் வருமான வரம்பு விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுத்தால்தான் 27 சதவீத இட ஒதுக்கீட்டு பயனை இந்த ஆண்டே பெற இயலும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மன்மோகன் சிங், இட ஒதுக்கீடு விஷயத்தில் கிரீமி லேயர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சியினருடனும் கருத்து கேட்டு கருத்தொற்றுமையை ஏற்படுத்துமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை தாம் அறிவுறுத்தி இருப்பதாக பாலுவிடம் தெரிவித்தார்.

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக கருணாநிதியுடனும் , பிரமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழர் நலனைக் காப்பதில் விழிப்புணர்வு வேண்டும் : சரத்குமார்
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து
தமிழரின் சிறப்பைக் காட்டும் சித்திரைத் திருநாள் : வைகோ
கல்வி, மருத்துவ உதவி நிதி வழங்கினார் கருணா‌நி‌தி
நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...