யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழர் நலனைக் காப்பதில் விழிப்புணர்வு வேண்டும் : சரத்குமார்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 15:27 IST )
தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டார்.

சித்திரைத் திருநாளையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரைத் திருநாள் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்து விட்ட திருநாளாகும்.

வேளாண்மை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வாழ்வில், வருகிற ஆண்டுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளில் தமிழகம் முழுவதும் வேனிற்கால திருவிழாக்களில் கலந்து கொள்வது, புதுக்கணக்கு துவங்குவது, விளை நிலத்தை அபிவிருத்தி செய்வது போன்ற புதிய முயற்சிகள் தொடங்குவது, இந்த சித்திரைத் திருநாளையொட்டிய சிறப்புக்களாகும்.

தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அண்மைக் கால நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே, ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழ் உலகம் காட்டிய ஒற்றுமை உணர்வு, வளமான தமிழகத்தை உருவாக்குவதிலும் மேலோங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து
தமிழரின் சிறப்பைக் காட்டும் சித்திரைத் திருநாள் : வைகோ
கல்வி, மருத்துவ உதவி நிதி வழங்கினார் கருணா‌நி‌தி
நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
கோடைக்கு 460 சிறப்பு ரயில்கள் : வேலு தகவல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...