|
| சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008 ( 14:05 IST ) | |
சித்திரைத் திருநாளையையொட்டி தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
சித்திரைத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் சுடர்விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், தம் மக்களின் நலனுக்காக தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கும் சுயநலவாதிகளும், துரோகிகளும் கூனிக்குறுகிடவும், ஆணவமும், ஆடம்பரமும், வீண் ஆரவாரமும் அடங்கி ஒடுங்கிடவும், உண்மையான மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மீண்டும் மலர்ந்து மணம் வீசிடவும் இந்த நன்னாளில் சூளுரைப்போம்.
தமிழக மக்களை தற்போது வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற துன்பங்களும், துயரங்களும் அறவே நீங்கி அமைதியும், ஆனந்தமும், குதூகுலமும் சரிவதாரி ஆண்டில் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அனைத்துத் தமிழர்களுக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|