யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விவசாயிகளுக்கு கடனுதவியும் அளிக்க வேண்டும் : ஜெயலலிதா
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008   ( 16:07 IST )
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியுடன், கடனுதவியும் அளிக்க வேண்டும் என்று அதிமுபொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளுக்கு ஏதோ கண் துடைப்பாக ஹெக்டேருக்கு ரூ.4,000 நிவாரணத் தொகையை கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்றும், குறைந்தது ரூ.10,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்பது விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மழையாலும், வெள்ளத்தாலும் பொதுமக்கள் இன்னலுற்று வரும் இந்த நிலையில், முன்னேற்பாடாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாகச் செயல்படும் திமுக அரசை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்புகளுக்கு ஏற்றபடி விவசாயப் பெருமக்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அவர், மழையால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், முற்றிலும் பயிர்கள் அழிந்துவிட்ட நிலையில் விவசாயப் பெருமக்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் அல்லாமல், அவர்கள் தொடர்ந்து பயிர் செய்ய கூட்டுறவு விவசாய வங்கிகள் மூலமாகக் கடனும் வழங்கப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா தனது அறிக்கையில் வ‌லியுறு‌த்‌தியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜய டி.ராஜே‌ந்த‌ர் திடீர் ராஜினாமா
தமிழகத்தில் மழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவர் கைது
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மகன் பரிமளம் தற்கொலை
'புதிய புயல் சின்னம்; தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்'
ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...