|
| விஜய டி.ராஜேந்தர் திடீர் ராஜினாமா |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 14:09 IST ) | |
இலங்கை தமிழருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால், மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து தாம் ராஜினாமா செய்வதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசு, அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்வது வருத்தம் அளிக்கிறது. இலங்கை ராணுவ தளபதிக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை" என்றார்.
"இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி இம்மாதம் 29-ம் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5-ம் தேதி சென்னையிலும் லட்சிய தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்தப் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்" என்று விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதிருக்கு இன்று அனுப்பிவிட்டதாக கூறிய அவர், "எக்காரணத்தை கொண்டும் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மாட்டேன்" என்றார் விஜய டி.ராஜேந்தர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|