யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
முன்னாள் முதல்வர் அண்ணா மகன் பரிமளம் தற்கொலை
சென்னை(ஏஜென்சி), 25 மார்ச் 2008   ( 11:32 IST )
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா மகன் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார்.

திமுகவை தோற்றுவித்தவரும் , தமிழக முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா என்ற அழைக்கப்பட்ட அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம்.

சென்னை நுங்கம்பாகத்தில் வசித்துவந்த 67 வயதாகும் இவர் அரசு டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.கடந்த சில நாட்களாக இவருக்கு உடல் நலக்குறைவு இருந்துவந்தது.

இருதய நோய் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்றுதான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இரவு படுக்கப்போகும் முன்னர் , தம்மால் குடும்பத்தினருக்கு தொல்லையாக இருப்பதாகவும் , எனவே இறந்து போன தனது மனைவி சென்ற இடத்திற்கே தாமும் செல்வதாக கூறி அழுதுள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி படுக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவர் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டு தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

பரிமளத்திற்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.அவரது மனைவி சரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மரணமடைந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து பரிமளத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை 11 மணியளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரிமளம் இறந்தது குறித்த தகவலறிந்த முதலமைச்சர் கருணாநிதி , நுங்கம்பாக்கத்திலுள்ள பரிமளத்தின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

பரிமளத்தின் மறைவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.பரிமளத்தின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது , அண்ணாவுடன் தொடர்புடைய அனைவருக்கும் பேரிழப்பு என தனது இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விவசாயிகளுக்கு கடனுதவியும் அளிக்க வேண்டும் : ஜெயலலிதா
விஜய டி.ராஜே‌ந்த‌ர் திடீர் ராஜினாமா
தமிழகத்தில் மழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவர் கைது
'புதிய புயல் சின்னம்; தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்'
ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...