யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008   ( 10:41 IST )
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நாளை (புதன்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக த்திய அரசு ஊழியர்கள் மகா கூட்டமைப்பின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது என்றும், நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது என்ற அவர், அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும் என்று கூறினார்.

இந்த பரிந்துரைகளைக் கண்டித்து நாளை மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின் வெட்டால் ஜவுளித் தொழில் பாதிப்பு : இளங்கோவன்
மெட்ரிக், ஓஎஸ்எல்சி தேர்வுகள் தொடங்கியது
வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனம் : ஜி.கே.மணி சாடல்
பயிர்கள் சேதத்துக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் : ஸ்டாலின்
தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை
சென்னையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...