|
| மின் வெட்டால் ஜவுளித் தொழில் பாதிப்பு : இளங்கோவன் |
| மதுரை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 10:21 IST ) | |
தமிழகத்தில் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு, மின் வெட்டும் ஒரு காரணம் என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மின் வெட்டு காரணமாக திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் கூட்டுறவு ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளதற்கும் மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற அவர், நாட்டின் ஜவுளிச் சந்தையில் பஞ்சு, சகாய விலைக்குக் கிடைக்கும் வகையில் அதன் மீதான ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூன்றாவது அணி முயற்சி குறித்து அவர் கூறுகையில், இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவதாக முடிவு செய்தால், வரும் தேர்தலில் அக்கட்சிக் கூட்டணி தோல்வியைச் சந்திப்பது உறுதி என்றும், அக்கூட்டணி மூன்றாவதாகக் கூட வர முடியாது என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி போதுமானதாகத் தெரியவில்லை என்றும், இந்தத் தொகையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|