யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மெட்ரிக், ஓஎஸ்எல்சி தேர்வுகள் தொடங்கியது
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008   ( 10:07 IST )
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன், ஓரியண்டல் கல்வி, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறையின் கீழ், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது போல், இந்தத் தேர்வுகளுக்கும் இதே கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் தேர்வை 1,06,047 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 47,622 பேர் மாணவிகள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,500 பேர் எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,595 பேர் எழுதுகிறார்கள்.

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வைப் போல், இதர மாணவர்களின் விடைத்தாள்களும் அதிகபட்ச மதிப்பெண்ணாக 500 என மதிப்பிடப்படுகிறது.

கடந்த காலங்களில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 1000 என்பது வரையில் மதிப்பீடு இருந்து வந்தது.

இந்நிலையில், சமச்சீர்க் கல்வி முறையின் முதல் கட்ட நடவடிக்கையாக அனைத்து வகை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணாக 500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு வரும் 27-ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனம் : ஜி.கே.மணி சாடல்
பயிர்கள் சேதத்துக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் : ஸ்டாலின்
தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை
சென்னையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிவகாசி ஜெயலட்சுமி சர்ச்சை போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி
கச்சத் தீவை மீட்க களமிறங்குகிறது பா.ஜனதா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...