|
| வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனம் : ஜி.கே.மணி சாடல் |
| தூத்துக்குடி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 10:06 IST ) | |
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி சாடினார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிடுகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேட்டியளித்த அவர், மழை வெள்ளத்தால் தூத்துக்குடியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்றும், அரசு சார்பில் பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 4,000 நிவாரணமாக அறிவித்திருப்பது போதுமானதாக இல்லை; ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்கு உதவ வசதியாக 2 நாள்கள் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடுவதற்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகள் முதல்வரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படாதது வேதனை அளிப்பதாக கூறினார்.
மேலும், வெள்ள நிவாரணத்துக்கு முதல்வர் ரூ. 100 கோடி ஒதுக்கியிருப்பது போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|