|
| பயிர்கள் சேதத்துக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் : ஸ்டாலின் |
| நெல்லை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 09:49 IST ) | |
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரிய தொகை நிவாரணமாக வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பொதுச்சாலைகள் மற்றும் நகர சாலைகள் 331 கிலோ மீட்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளது; 336 குடிசைகள் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது" என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருவது குறித்து கேட்டபோது, "மத்திய அரசு ஒரு ஹெக்டேருக்கு நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் நிர்ணயித்துள்ளது. கூடுதலாக வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இதுகுறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு உரிய நேரத்தில், உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|