யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 18:01 IST )
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் இந்த பேய் மழை, அந்த மாவட்டங்களில் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பருவம் தவறி பெய்து வரும் இந்த தொடர் மழை காரணமாக, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் அளவுள்ள நெற்பயிர்கள், வாழை போன்றவை நாசமாகியுள்ளன.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவை உடைந்து கிராமங்களை சூழ்ந்துள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் தனித் தனி தீவுகள் போல தத்தளித்து கொண்டிருக்கின்றன. மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்துகள், ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டதில், பல பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடன்குடி அருகே ஆற்றுப்பாலத்தில் அரசு பஸ் சிக்கியதில், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. எனினும், அதில் பயணம் செய்த 17 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பிவிட்டனர்.

ஆனாலும், இந்த பேய் மழைக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 26 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை தமிழக அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த உயர் மட்டக்குழு கூட்டத்தில் மழை வெள்ளச் சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்தது.இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

இதற்கிடையே, மன்னார் வளைகுடாவில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளது.

எனினும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அங்கேயே நிலை கொண்டிருப்பதால் இன்னும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிவகாசி ஜெயலட்சுமி சர்ச்சை போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி
கச்சத் தீவை மீட்க களமிறங்குகிறது பா.ஜனதா
மூன்றாவது அணி எடுபடாது : ஜெயந்தி நடராஜன்
கி.வீரமணி மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...