யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சிவகாசி ஜெயலட்சுமி சர்ச்சை போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி
சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 17:07 IST )
சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் சிக்கிய போலீஸ் அதிகாரி ராஜசேகரை மீண்டும் பணியில் அமர்த்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்த விவகாரத்தில் சிக்கிய ராஜசேகர் , அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ராஜசேகருக்கும், சிவகாசி ஜெயலட்சுமிக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம் , அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்தது.

இந்நிலையில் , திருச்சி ஆயுதப் படை பிரிவில் ராஜசேகர் பணியாற்றிய போது செல்லத்துரை என்ற போலீஸ்காரர் 2 கைத்துப்பாக்கிகளையும், 4 ஆயிரம் தோட்டாக்களையும் திருடி மாமல்லன் என்பவருக்கு விற்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ராஜசேகருக்கு " மெமோ' அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராஜசேகர் வழக்கு தொடுத்தார். மெமோவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து தன் மீது எந்தவித குற்றச்சாட்டும், வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் மீண்டும் தனக்கு பணி வழங்க வேண்டும் என்றும் கோரி ராஜசேகர் மனு கொடுத்தார்.

அதன் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் நிலுவையில் இல்லை என்பதால் அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் , இதுகுறித்து தமிழக அரசு 12 வார காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மழை :குஜராத்தை பின்பற்ற தமிழக அரசுக்கு பா.ஜ. யோசனை
மூன்றாவது அணி எடுபடாது : ஜெயந்தி நடராஜன்
கி.வீரமணி மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழகத்தில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள்
தொடர் மழை: பலி எண்ணிக்கை 26 ஆனது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...