யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கச்சத் தீவை மீட்க களமிறங்குகிறது பா.ஜனதா
சென்னை (ஏஜென்சி), 24 மார்ச் 2008   ( 16:22 IST )
கச்சத்தீவை மீட்பதற்காக நீதிமன்றத்தை நாட தமது கட்சி முடிவு செய்துள்ளதாக தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் அங்கு வலைகளை காயப்போட உரிமை உண்டு.ஆனால் மீன் பிடிக்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்காக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

மழை நீர் வீணாக கடலில் போய் கலப்பதை தடுக்கவும், அதை சேமிக்கவும், ஏரிகள், குளங்களை ஆழப்படுத்த நிரந்தர திட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும்.குஜராத்தில் இந்த மாதிரியான நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.அதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஒதுக்குகிற நிவாரணம் போதாது. சேதத்துக்கு தகுந்தாற்போல இழப்பீடு தர வேண்டும். அந்த நிவாரணை தொகையை தாமதமின்றி தரவேண்டும்.

கடந்த 3 மாதங்களில் விலைவாசி 50 சதவீதம் உயர்ந்துவிட்டது.ஆனால் விலைவாசி உயர்வை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிறார். அவருக்கு விமானப்பயணம் செய்கிறவர்கள் பற்றி மட்டுமே மக்கள் சந்திக்கும் பிரச்சனை அவருக்கு தெரிவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிவகாசி ஜெயலட்சுமி சர்ச்சை போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி
மூன்றாவது அணி எடுபடாது : ஜெயந்தி நடராஜன்
கி.வீரமணி மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழகத்தில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள்
தொடர் மழை: பலி எண்ணிக்கை 26 ஆனது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...