யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'கேரம்' இளவழகியின் கோரிக்கை நிறைவேறும்: கனிமொழி உறுதி
சென்னை (ஏஜென்சி), 3 மார்ச் 2008   ( 11:03 IST )
அரசு வேலை வேண்டும் என்ற 'கேரம்' இளவழகியின் கோரிக்கையை, தமிழக அரசிடம் தாம் கொண்டு செல்லவிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை இளவழகிக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை, சென்னை தமிழ்மையம் சார்பில் கனிமொழி வழங்கினார்.

இதற்காக நேற்று நடந்த பாராட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இளவழகி, உலக பட்டம் வென்ற தனக்கு, அரசு பொருளாதார ரீதியாக இதுவரை எந்த உதவியும் அளிக்கவில்லை என்றும், குடிசை மாற்று வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வரும் தனக்கு ஒரு வீடு, நிரந்தர அரசு வேலை ஆகியவற்றை இந்த அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், நிறைய வீரர்களை தமிழக முதல்வர் ஊக்கப்படுத்தி இருப்பதாகவும், இளவழகியின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு தாம் கொண்டு செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இளவழகிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று தாம் ௦நம்புவதாகவும் கனிமொழி கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிதம்பரம் : போலீஸ் பாதுகாப்புடன் தமிழில் தேவாரம்
ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது; காப்பியடித்தால் கடும் நவடிக்கை
மது விலக்கு கொள்கை : ராமதாஸுக்கு டி.ஆர்.பாலு பதில்
மாநிலங்களவை தேர்தல்: மார்ச் 7ல் திமுக கூட்டணி ஆலோசனை
தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் : அரசு அறிவிப்பு
12-ம் வகுப்புக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace