|
| சிதம்பரம் : போலீஸ் பாதுகாப்புடன் தமிழில் தேவாரம் |
| சிதம்பரம் (ஏஜென்சி), 3 மார்ச் 2008 ( 10:44 IST ) | |
சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே தமிழில் தேவாரம் பாடப்பட்டது.
கோயில் பூஜை காலம் முடிந்த பிறகு, சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையிலிருந்து தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு தலைமையில் தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் தெற்கு சன்னதி வழியாக நடராஜர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
அப்போது ஆறுமுகசாமி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் ஆகியோரை தீட்சிதர்கள் தடுத்துள்ளனர். அதன்பின், சட்டை அணியாத போலீசார் உள்ளே சென்று தீட்சிதர்களை அப்புறப்படுத்தி, ஆறுமுகசாமியைத் தமிழில் தேவாரம் பாட வைத்தனர். இதனால், சிதம்பரத்தில் மிகுந்த பதற்றம் நிலவியது.
தமிழில் தேவாரம் பாடுவதை முன்னிட்டு ஆலயத்துக்குள்ளும், நகரின் 4 வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு உத்தரவை நிறைவேற்றச் சென்றபோது குறுக்கீடு செய்தல், போலீசார் மீது பலப்பிரயோகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் 25 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|