|
| ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது; காப்பியடித்தால் கடும் நவடிக்கை |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 மார்ச் 2008 ( 10:05 IST ) | |
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ப்ளஸ் - 2 தேர்வுகள் தொடங்கின. முன்னதாக, இந்தத் தேர்வுகளில் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளைச் செய்தால், 5 ஆண்டு வரைத் தேர்வு எழுத முடியாமல் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், தேர்வு நடைபெறும்போது, மாணவர்கள் துண்டுத்தாள் வைத்திருந்தாலோ, துண்டுச் சீட்டைப் பார்த்து எழுதினாலோ, காப்பி அடித்தாலோ, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொண்டாலோ, தேர்வுத் தாள்களை மாற்றி மோசடி செய்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்ற் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இத்தகைய ஒழுங்கீனங்கள் தொடர்பாக 199 பேர் தண்டனை பெற்றனர் என்று தெரிவித்த அவர், மாநிலம் முழுவதும் வினாத்தாள்களைப் பாதுகாக்க 278 மையங்கள் உள்ளன; அவற்றின் பாதுகாப்பு குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்கிறார்கள். அங்கு 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்படும் என்று கூறினார்.
இணை இயக்குநர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் தேர்வு மையங்களைப் பார்வையிட்டு, கண்காணிக்கும்; முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் செயல்படும் என்று கூறிய அவர், மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களைக் கண்காணிப்பதாக தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 4,819 பள்ளிகளைச் சேர்ந்த 5,93,306 பேர் ப்ளஸ் 2 தேர்வை எழுதுகிறார்கள். மொத்தம் 1,684 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில் 3,11,281 பேர் மாணவியர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 30,596 பேர் கூடுதலாகத் தேர்வு எழுதுகிறார்கள். மாணவியர் மட்டும் 19,186 பேர் இந்த ஆண்டு அதிகரித்துள்ளனர். தத்கால் திட்டப்படி விண்ணப்பித்தோர் 1,792 பேர் உள்பட தனித் தேர்வர்களாக மொத்தம் 49,460 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னை மாநகரில் 135 மையங்களில் மொத்தம் 45,891 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவியர் 25,279 பேர். புதுவையில் உள்ள 30 மையங்களில் 11,002 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 5,845 பேர் மாணவியர்.
இந்த வருடம், வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|