யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மது விலக்கு கொள்கை : ராமதாஸுக்கு டி.ஆர்.பாலு பதில்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 மார்ச் 2008   ( 09:53 IST )
தமிழகத்தில் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதுதொடர்பாக மத்திய அரசையே வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து தரை வழிப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விலக்குப் பிரச்சினை தமிழகத்திற்கு மாத்திரம் உரியதோ, அல்லது வருவாயை மட்டும் பொறுத்ததோ அல்ல; இது அகில இந்திய பிரச்சினை என்றும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை செய்யும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்தால், தமிழகம் எங்கும் கள்ளச்சாராயம் பெருகி, பலர் உயிர்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் மதுவிலக்கு பிரச்சினையில் தீவிரமாக இருப்பதை வரவேற்பதுடன், மத்திய அரசை வற்புறுத்தி அகில இந்திய அளவில் ஒரு கொள்கை முடிவெடுப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால், அதை திமுகவும் வரவேற்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக ஊருக்கு ஊர் பிரசாரம் செய்து வருகிறார் என்றும், இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பை ரூ.10 ஆயிரம் கோடி அரசுக்கு கிடைக்க அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மது விலக்கினை அமல்படுத்தியதால் கள்ளச்சாராய வழக்கில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் சிறையில் இருப்பதாக அறிவித்து, தமிழகத்திலே மீண்டும் மது விற்பனை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று ஒரு வார இதழில் கட்டுரை எழுதியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாநிலங்களவை தேர்தல்: மார்ச் 7ல் திமுக கூட்டணி ஆலோசனை
தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் : அரசு அறிவிப்பு
12-ம் வகுப்புக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்
இலங்கை மீனவ‌ர்க‌ள் ‌இன்று விடு‌வி‌ப்பு
56வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
' ‌திமுகவுட‌ன் காங்கிரஸ் கூ‌‌ட்ட‌ணி தொடரு‌ம் '
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace