|
| மாநிலங்களவை தேர்தல்: மார்ச் 7ல் திமுக கூட்டணி ஆலோசனை |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2008 ( 13:51 IST ) | |
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக, இம்மாதம் 7-ம் தேதியன்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இம்மாதம் 8-ம் தேதியன்று தொடங்குகிறது.
இந்த ஆறு இடங்களுக்கு, ஆறு பேர் மட்டுமே போட்டியிடும்பட்சத்தில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|