யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் : அரசு அறிவிப்பு
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2008   ( 12:32 IST )
சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையிலிருந்து தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி பிறப்பித்த ஆணையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதில், காலபூஜை முடிந்த பிறகு, அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில், பக்தர்கள் சிற்றம்பல மேடையில் இருந்து, 30 நிமிடங்கள் தமிழில் தேவாரம் திருமறைகளை அதிக சத்தம் இல்லாமல், பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாடவேண்டும் என்றும், முன்கூட்டியே கோவில் நிர்வாகத்துக்கு தெரிவித்து பாடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

முன்னதாக, இந்த மேடையில் இருந்து பக்தர்கள் தமிழில் தேவாரம் திருமறைகளை பாடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி ஓர் ஆணை பிறப்பித்திருந்தார். இந்த ஆணையை எதிர்த்து அங்குள்ள தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில், மேடையில் இருந்து பாடக்கூடாது எனவும், கீழே உள்ள மண்டபத்தில் இருந்துதான் பாட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் அரசு விசாரணை செய்து முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
12-ம் வகுப்புக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்
இலங்கை மீனவ‌ர்க‌ள் ‌இன்று விடு‌வி‌ப்பு
56வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
' ‌திமுகவுட‌ன் காங்கிரஸ் கூ‌‌ட்ட‌ணி தொடரு‌ம் '
முருகதாஸ் விவகாரம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ராமர் பாலம் : காங். தோல்விக்கு ராமகோபாலன் சபதம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace