யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
12-ம் வகுப்புக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2008   ( 12:14 IST )
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்புகளுக்கான (பிளஸ்-2) தேர்வுகள் நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வுகளை 6 லட்சத்து 60 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதுகிறார்கள்.

மொத்தம் 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வுகள் வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 891 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 20 ஆயிரத்து 506 பேர் மாணவர்கள். 25 ஆயிரத்து 385 பேர் மாணவிகள். இவர்களுக்காக 135 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே காப்பி அடிக்கப்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு நிலையான கண்காணிக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும் தேர்வு அறைக்கு துண்டுச் சீட்டுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காப்பி அடித்தாலும், ஆள் மாறாட்டம் செய்து மற்ற மாணவருக்காக வேறு ஒருவர் தேர்வு எழுதினாலும் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பெரிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மையங்களுக்கு செல்போன்கள் எடுத்து செல்லக்கூடாது. இந்த வருடம் வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பதற்றமின்றி கேள்விகளை வாசித்து பார்த்து சரியான விடையை எழுதவேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை மீனவ‌ர்க‌ள் ‌இன்று விடு‌வி‌ப்பு
56வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
' ‌திமுகவுட‌ன் காங்கிரஸ் கூ‌‌ட்ட‌ணி தொடரு‌ம் '
முருகதாஸ் விவகாரம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ராமர் பாலம் : காங். தோல்விக்கு ராமகோபாலன் சபதம்
எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதாதான் : விஜய டி.ராஜேந்தர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace