|
| இலங்கை மீனவர்கள் இன்று விடுவிப்பு |
| ஏசென்னை (ஏஜென்சி), 1 மார்ச் 2008 ( 18:05 IST ) | |
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேரும் விசாரணைக்குப் பிறகு இன்று மாலை விடுவிக்கப்படுகின்றனர்.
நாகப்பட்டணம் அருகில் இந்திய கடல்பகுதியில் 4 மீன்பிடி படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 இலங்கை மீனவர்களைக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.
பின்னர் அவர்களை சென்னை காசிமேட்டிற்குக் கொண்டுவந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் தாங்கள் எந்த உள்நோக்கத்துடனும் வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மன்னித்து அனுப்புவது என்று அரசுக்கு ஆட்சியர் சிபாரிசு செய்தார்.
தற்போது, 21 இலங்கை மீனவர்களும் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவு வந்த பிறகு அவர்கள் இன்று மாலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்களின் நவீன விசைப் படகுகளும் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|