|
| ' திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் ' |
தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது :
மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது.ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான பட்ஜெட் என்று எல்லோரும் பாராட்டுகின்றனர்.சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.60,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதை வேளாண் விஞ்ஞானி சாமிநாதனே பாராட்டி இருக்கிறார்.
மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் தனது தலைமையில் வருகிற 9-ந்தேதி மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடக்கும்.அதில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
மூன்றாவது அணி என்று யார் சொன்னாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராது.தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.அடுத்த தேர்தலில் இதே கூட்டணி தொடரும்.தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|