யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
முருகதாஸ் விவகாரம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ஏஜென்சி (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 மார்ச் 2008   ( 17:35 IST )
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை வலுக்கட்டாயமாக சென்னையில் இருந்து சேலத்துக்கு அழைத்துச் சென்ற சேலம் குற்ற பிரிவு ன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் முருகதாஸுக்கு எதிராக தயாரிப்பாளர் சந்திரசேகர் அளித்த புகார் மீது இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், புகாரில் உண்மையில்லை என்பது தெளிவாக தெரிந்த நிலையிலும், சென்னைக்கு வந்து முருகதாஸை வலுக்கட்டயமாக கிருஷ்ணன் சேலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றும், இதனால் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்து காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.

மேலும், இதுதொடர்பாக கிருஷ்ணன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள டிஜிபி, தயாரிப்பாளரின் புகார் குறித்து விசாரிக்க மற்றொரு இன்ஸ்பெக்டர் விசாரிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த முருகதாஸை, சேலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் பலவந்தமாக காரில் அழைத்துச் சென்றார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஜினி படம் தொடர்பான அனைத்து உரிமைகளும் தன்னிடம் இருப்பதாகவும், இயக்குனர் முருகதாஸும் படத் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்கள் கீதா ஆர்ட்ஸ் சம்பத்குமார், மது ஆகியோரும் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, கஜினியை இந்தியில் ரீ-மேக் செய்து வருவதாகவும், இதனால் 4 கோடி ரூபாய் வரை நஷ்டமென்றும், தன்னை ஏமாற்றிய முருகதாஸ், சம்பத்குமார், மது ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரசேகர் சேலம் போலீஸில் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராமர் பாலம் : காங். தோல்விக்கு ராமகோபாலன் சபதம்
எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதாதான் : விஜய டி.ராஜேந்தர்
பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92 அடி
இரவில் தடையற்ற மின்சார வினியோகம் : ஆற்க்காடு வீராசாமி
சேது திட்டத்தை ராமரின் பெயரால் தடுக்க முயற்சி : ஏ.பி.பரதன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace