|
| ராமர் பாலம் : காங். தோல்விக்கு ராமகோபாலன் சபதம் |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 1 மார்ச் 2008 ( 17:16 IST ) | |
ராமர் பாலத்தை உடைத்து தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் கூட்டணியை தேர்தலில் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று தமிழக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
ராமர் பாலத்தை உடைத்துதான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காங்கிரசும் வேறு சக்திகளும் கை கோர்த்துக் கொண்டு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் `ஸ்ரீராமநவமி' அன்று ஒரே நாளில் 35 லட்சம் ராம பக்தர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கொடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
2007 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் ராம பக்தர்கள் டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்று ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்று ஒரே குரலில் தீர்மானித்தார்கள்.காங்கிரஸ் அரசு தற்போது இந்த ராமர் பாலத்தை இடிக்க துணிந்திருப்பது கோடான கோடி ராமர் பக்தர்களுக்கு சவால் விடுவதாகும்.
ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா அல்லது தானாக உருவானதா என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை. ராமர் பாலத்தை உடைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாண பத்திரத்தில் அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ராமர் பாலத்தை உடைத்து தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தீவிர பிரசாரம் நடத்தி வர இருக்கும் தேர்தலில் இவர்களை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். இவர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|