|
| எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதாதான் : விஜய டி.ராஜேந்தர் |
| சென்னை(ஏஜென்சி), 1 மார்ச் 2008 ( 16:54 IST ) | |
எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதாதான் என்று லட்சிய திமுக கட்சியின் தலைவரும்,பிரபல திரைப்பட இயக்குனருமான விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது :
எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என பல பேர் பேசி வருகிறார்கள். பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவன் என்ற அடிப்படையில் என்னுடைய கருத்து என்னவென்றால், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என்று சொல்வதற்கு ஜெயலலிதாவிற்கு தான் தகுதி உள்ளது.
பல கட்சிகள் 2011ல் தாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகிறார்கள். மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொல்வார்கள். அன்று மழை வராது. திடீரென ஒருநாள் வந்து சேரும்.அதுபோல சொல்கிறவர்கள் ஆட்சியை பிடிக்காமல் எங்களை போன்ற கட்சிகளும் மாற்றத்தை கொண்டு வரலாம்.
இன்னும் நான் திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன்.பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு சீட் கேட்பேன் என்று கேட்கப்படுகிறது.பிள்ளையே பிறக்காதபோது அதற்கென்ன பேர் வைப்பீர்கள் என்று கேட்பது அர்த்தமற்றது.ஆனால் லட்சிய திமுக என்ற புள்ளி இல்லாமல் யாரும் இங்கு அரசியல் கோலம் போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|