யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
டி‌ஜிஎ‌ஸ் ‌தி‌னகர‌ன் மரணம்: முதல்வர் அஞ்சலி
சென்னை (ஏஜென்சி), 20 பிப்ரவரி 2008   ( 11:42 IST )
பிரபல ‌கி‌றி‌ஸ்தவ மத போதக‌ர் டி‌ஜிஎ‌ஸ் ‌தினகர‌ன் இ‌ன்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல கிறிஸ்தவ மதபோதகர் டிஜிஎஸ் தினகரன் (74). நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை அடையாறில் 'இயேசு அழைக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பை துவங்கி, மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

சமீபகாலமாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனா‌ல் கட‌ந்த ஜனவ‌ரி 29ஆ‌ம் தே‌தி செ‌ன்னை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல் ‌அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

எனினும், ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி இ‌ன்று காலை 6.30 ம‌ணி அ‌ள‌வி‌ல் காலமானா‌ர். ‌இதுகுறித்து தகவலறிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பல்வேறு முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து, தினகரனின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ‌பொது ம‌க்க‌‌‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக வைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினகரனுக்கு ஸ்டெல்லா தினகரன் என்ற மனைவி மற்றும் பால் தினகரன் என்ற மகன், வாஞ்சலின் என்ற மருமகள் ஆகியோர் உள்ளனர். தினகரனின் மகள் ஏஞ்சல், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நில ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு அரசு நோட்டீஸ்
திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்
அரசு கேபிள் டிவி ஜூன் மாதம் தொடங்கும்!
இல‌ங்கை‌க்கு 40 மூ‌ட்டை ‌பீடி கட‌த்‌தல்: 3 பே‌ர் கைது
கருணாநிதிக்கு ராம கோபாலன் கோரிக்கை
'தமிழ் கட்டாயப்பாடம் தீர்ப்பு: தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி'
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace