|
| நில ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு அரசு நோட்டீஸ் |
| சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 20 பிப்ரவரி 2008 ( 11:27 IST ) | |
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், தனது பண்ணை நிலத்தில் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேவாதூர் கிராமத்தில் விஜயகாந்த்துக்குச் சொந்தமாக பண்ணை ஒன்று உள்ளது.எறக்குறைய 402 ஏக்கர் பரப்பளவிலான இந்த பண்ணையின் 38 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.
கோவில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை விஜயகாந்த் ஆக்கிரமித்துள்ளார் என்று தேவாதூர் கிராம ஊராட்சித் தலைவி மீனா சமீபத்தில் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
மேலும் அந்த பண்ணையை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி போடப்பட்டிருப்பதாகவும், இதனால் அந்த பக்கமாக செல்லும் ஆடு, மாடுகள் மின்சாரம் தக்கி இறந்துபோவதாகவும் கிராம மக்கள் புகார் கூறினர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து மதுராந்தகம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 88 சென்ட் ஓடைப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேற்று அப் பகுதியை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வுக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர்.
ஆங்காங்கு ஒட்டப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொதுப்பணித்துறையே ஆக்கிரமிப்பை அகற்றும். அதற்குரிய செலவுகளை உரியவர்கள் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|