யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அரசு கேபிள் டிவி ஜூன் மாதம் தொடங்கும்!
சென்னை (ஏஜென்சி), 20 பிப்ரவரி 2008   ( 09:29 IST )
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல், அரசு கேபிள் டிவி தொடங்குகிறது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபரில் இதற்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அடங்கிய இந்த குழுவின் உறுப்பினர்கள், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம்:

* தமிழக அரசு கேபிள் டிவியின் சார்பில் கோவை, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் எம்.எஸ்.ஓ (கட்டுப்பாட்டு மையங்கள்) அமைப்பது. இதன்மூலம் வரும் ஜூன் மாதத்திலிருந்து கேபிள் டிவி சேவைகளை துவங்க நடவடிக்கை எடுப்பது.

* சென்னையில் 'காஸ்' திட்டம் அமலில் இருப்பதால், மத்திய அரசின் அனுமதி பெற்று அதன் பின்னர் எம்.எஸ்.ஓ.க்கள் அமைப்பது மற்றும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது.

* கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வரிச்சுமையை குறைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பது.

* கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கேபிள்களை துண்டிப்பவர்கள், மிரட்டுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வரும் ஜூன் மாதம் அரசு கேபிள் டிவி துவங்கும் என
தெரிகிறது. கோவை, நெல்லை, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் 'கட்டுப்பாட்டு அறைகள்' மூலம் சுமார் 150 கி.மீ. வரை உள்ள எம்.எஸ்.ஓ.க்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

அந்த எம்.எஸ்.ஓ.க்களிடமிருந்து சுற்றுவட்டாரப் பகுதி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைப்புகளை பெற்று தங்களது பகுதியிலுள்ள வீடுகளுக்கு வழங்குவார்கள். இதன் மூலம், சென்னையை தவிர, தமிழகம் முழுவதும் கேபிள் இணைப்புகள் வழங்கப்படும்.

சென்னையில் மத்திய அரசின் அனுமதிக்கு பிறகு, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். இங்கிருந்து 'செட்ஆப் பாக்ஸ்' மூலமே சென்னைவாசிகள் கேபிள் இணைப்புகளை பெறமுடியும் என தெரிகிறது.

மிகவும் நவீன தொழிற்நுட்ப உதவியுடன் துல்லியமான ஒளிபரப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துச் சேனல்களையும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தின் மூலம் இந்த ஒளிபரப்பு செய்யப்படும்.

தற்போதுள்ள எஸ்.சி.வி மற்றும் ஹாத்வே போன்ற இணைப்புகள் மூலம், கேபிள் ஒளிபரப்பு வழங்கப்படாது என தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இல‌ங்கை‌க்கு 40 மூ‌ட்டை ‌பீடி கட‌த்‌தல்: 3 பே‌ர் கைது
கருணாநிதிக்கு ராம கோபாலன் கோரிக்கை
'தமிழ் கட்டாயப்பாடம் தீர்ப்பு: தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி'
அதிமுக இளைஞர் பாசறை மார்ச் 7ல் துவக்கம்: ஜெ.
அரசு கேபிள். டி.வி.யின் நன்மை: சரத்குமாருக்கு கருணாநிதி பதில்
திருச்செந்தூரில் நாளை மாசித் திருவிழா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace