|
| இலங்கைக்கு 40 மூட்டை பீடி கடத்தல்: 3 பேர் கைது |
| ராமநாதபுரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 18:22 IST ) | |
இலங்கைக்கு 40 மூட்டை பீடி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கடற்கரை பகுதிகளில் க்யூ பிராஞ்ச் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாசியாராணி கடற்கரையில் ஒரு கும்பல் வாகனங்களிலிருந்து சில மூட்டைகளை இறக்கு படகில் ஏற்றிக் கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அனைவரும் இலங்கைக்கு மூட்டை மூட்டையாக பீடி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், பீடி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|